பழங்குடி சமூகத்தில் பெண்களின் நிலை

 


பழங்குடி சமூகத்தில் பெண்களின் நிலை


பெண்கள் சமமாக நடத்தப்பட்டனர் ஆனால் அவர்களுக்கு சொத்து இருக்கவில்லை திருமணத்துக்கு பின்பு ஒரு பெண் தனது கணவரின் வீட்டுக்குச் செல்வார் அல்லது அவர்கள் தங்களுக்கு குடியிருப்பினை அமைத்துக் கொள்ள முடியும். சில குலங்களில் தாய்வழி தலைவர்கள் இருந்தனர். இது பெண்களை கூடுதல் மரியாதையையும் கண்ணியத்தையும் அளித்தது. பெண்கள் சமூகத்தில் முக்கிய பங்காற்றினர். எனவே அவர்களை காட்டுக்குள் தனியாக செல்ல விடாமல் தகுந்த கவனம் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பிற்கால மாற்றத்தில் குடியிருப்புகள் ஒன்றுக்கொன்று தொலைவில் வைக்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒரு வீட்டுத்தோட்டத்தை உருவாக்கியது. முற்றங்கள் விலாசமானவையாக மற்றும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. சில பூக்கும் புதர்கள் வேடர்கள் பசு மற்றும் எருமை மாடுகளை பாலுக்காக வளர்ப்பது முட்டைக்காக கோழி வளர்ப்பதையும் மேற்கொண்டு வந்தன.ர் புல் வெட்டுவது கால்நடை கார் தீவனம் கொண்டு வருவது வளர்ப்பது ஆண்களின் வேலையாக காணப்பட்டது.  பெண்கள் பால் கறப்பார்கள் மற்றும் விலங்குகளை பராமரிப்பார்கள். கும்புக்  இலைகளைப் பயன்படுத்தி பெண்கள் குடும்பத்தின் துணிகளை துவைப்பார்கள்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு அரைக்கும் கல் சொந்தமாக இருக்கும். கரடு முரடான தானியங்களை குத்துவதற்கு பூச்சி மற்றும் சாந்து கொட்டி கத்திகள் மற்றும் கோடாரி ஆகியவை வீட்டில் அத்தியாவசிய பொருட்களாக இருந்தன மரத்தூள் கருங்காலியால் ஆனது. ஒரு கிராமத்தில் எல்லா குடும்பங்களுக்கும் சமூகத்தில் சமமாகவே காணப்பட்டிருந்தன மக்கள் வளங்கள் திறன்களை பகிர்ந்து கொண்டனர் மற்றும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பினை வழங்கி இதை செய்யப்பட்டனர். பெண்களுக்கு எந்த கொடுமையும் மேற்கொள்ளப்படவில்லை. உறவும் அமைதியாகவே இருந்தது வேத்தா ஆண்களும் பெண்களும். காடுகளுடன் நீண்ட கால தொடர்பை கொண்டு , ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு வாய்மொழியாக கடத்தப்பட்ட அறிவூமுறையை உருவாக்கியுள்ளனர்.





ஆதிவாசிகள் இனம் அழிவதற்கான காரணங்கள்


இன்று வேதாக்கள் மத்திய இலங்கையில் உள்ள ஹுன்னஸ்கிரிய மலைகளில் தீவின் கிழக்கில் கடலோர தாழ்நிலங்கள் வரை சிறிய குடியிருப்புகளில் சிதறிக்கிடக்கின்றனர்.  எவ்வாறாயினும் இந்தோ-ஆரியர்கள் இப்போது ஆதிக்கம் செலுத்தும் சிங்கள- பௌத்த மக்கள் இந்தியாவில் இருந்து கி.மு 543 இல் இலங்கைக்கு வருவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பு ஆதிவாசிகள் தீவு முழுவதும் வாழ்ந்தனர். 

ஆதிவாசிகள் இலங்கை ஆரம்ப கால குடிமக்களாக இருந்த போதும் பலருக்கு அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது பல நூற்றாண்டுகளாக வேடர்கள் சிங்கள ஆட்சியில் களங்கப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். மேலும் சுற்றுலா ஆர்வலர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இன்று வேடர்கள் தேசிய மக்கள் தொகை ஒரு சதவீதத்திலும் குறைவானவர்களாக கருதப்படுகின்றனர்.

ரதுகல குகையில் வாழ்ந்து ஏழு குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்தை சிறிது காலம் கடைபிடித்து காட்டில் வாழ்ந்து வேட்டையாடி உணவு தேடி படிப்படியாக அவர்கள் சிங்கள விவசாயிகளுடனும் அருகில் உள்ள நகரங்களைச் சேர்ந்த முஸ்லிம் வியாபாரிகளுடனும்   இணைந்து கொண்டனர். காட்டில் உணவு பற்றாக்குறை ஏற்றப்பட்ட போது குணபாடிலத்தோவின் பெற்றோர் சோழம் ,தினை ,வெண்டைக்காய்  கருப்பட்டி போன்ற தானியங்களை சாகுபடி செய்தனர். "நாங்கள் மெல்ல மெல்ல எங்கள் வாழ்க்கை முறையை இழக்க ஆரம்பித்தோம்" என்று கூறுகின்றனர்.

மேலும் அவர் கூறுகையில் நாங்கள் சிறியவர்களாக இருந்த போது எங்கள் பெற்றோர்கள் எங்களை காட்டிற்கு அழைத்து சென்றனர். அவர்கள் குகைகள், தண்ணீர் எங்கே குடிக்க வேண்டும் ,நாங்கள் பசி எடுக்காமல் இருக்க எங்கள் உணவுகளை எப்படி கண்டுபிடிப்பது என்று எங்களுக்கு கூறியிருந்தார்கள். அவர்கள் ஒருபோதும் வறண்டு போகாத நீரோடைகளை காட்டினார்கள். நாங்கள் இப்போது காட்டுக்குச் செல்லும் போது நமக்கு அருகில் யானை அல்லது கரடி காட்டுக்குள் இருக்கிறதா என்பதை எங்களால் வாசனை ஊடாகவே அறிந்து கூறக்கூடியதாக இருக்கின்றது. என குணபண்டிலத்தோ கூறுகின்றார். அதே போன்று எங்கள் சிறு குழந்தைகளுக்கும் அதே அறிவை கொடுக்க விரும்புகிறோம் என்றும் தனது கருத்தினை வெளிப்படுத்தி இருந்தார்.

ரத்குலவைச் சுற்றியுள்ள காடுகளில் ஆடம்பரக் கூடாரங்களில் ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹோட்டல்களில் பணி புரிபவர்கள் 13 பேருக்கு உட்பட்டவர்கள் வந்து வேடர் பரம்பரையைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். வேட்டையாடும் சமூகத்திலிருந்து அவர்கள் தமது நாகரிக விருத்தி கருதி வளர்ச்சி அடைந்து கொண்டு செல்வதை காணக் கூடியதாக இருக்கின்றது. இதனால் வேடுவர் இனம் படிப்படியாக அழிவடைந்து வருவதை காண முடிகின்றது.

மேலும் அவர் கூறுகையில் அரசாங்கம் எப்பொழுதும் தங்களை கைவிட்டது அவர்கள் நம்மையும் நமது இருப்பையும் அங்கீகரித்து இருந்தால் அது நமது கலாச்சாரத்தை சிறப்பாக பாதுகாக்க உதவும்  என கூறுகின்றார். தனது சமூகம் தங்கள் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பற்றி பேசுவதற்காக மாதாந்திர கூட்டத்தை நடத்துகின்றதாகவும் சில இளைஞர்கள் தங்கள் பாரம்பரியத்தை பற்றி வலுவாக உணர்கிறார்கள் என்றும் கூறுகின்றார். விஜயன் மன்னன் வருவதற்கு முன்பு தாங்கள் இங்கு இருந்தோம் தாங்கள் நாட்டில் வாழும் மிகப் பழமையான குடிமக்கள் நாங்கள் இங்கு இருக்கிறோம் என்பதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகின்றார் எங்களிடம் எங்கள் மொழி உள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் . அதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என வேர்களின் தலைவர் கூறுகின்றார்.

தற்போது வேடர்கள் தேன் பீடி இலைகள் விற்றும் சிறு சிறு வேலைகள் செய்தும் வாழ்கிறார்கள் குறைந்த வாய்ப்புகளுடன் அவர்கள் செயல்படுகின்றனர். குலத்தின் இளைய உறுப்பினர்கள் பலர் தங்கள் சமூகங்களின் கலாச்சாரத்தை விட்டு விட்டு சிறந்த நிதி வாய்ப்புகளை கண்டறிய பெரிய நகரங்களில் செல்கிறார் என்று தலைவர் கூறுகின்றார்.

தற்போதைய இளம் தலைமுறையினர் வேடுவர் சமூகத்தினுடைய தொழிலிருந்து விடுபட்டு நாகரிக விருத்தி கருதி ஏனையர்களைப் போன்று தாங்களும் நிதி ரீதியாக / பொருளாதார ரீதியாக விருத்தி பெற வேண்டும் என்ற நோக்கம் கருதி அவர்கள் வேடர் சமூகத்தில் இருந்து விலகி  நகரங்களுக்கு செல்லும் போக்கினை காணக் கூடியதாக இருக்கின்றது. இதனால் தற்போது ஆதிவாசிகளின் தொகையானது படிப்படியாக குறைவடைந்து சென்று கொண்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

முதலாவதாக நாம் சமுதாயம் என்றால் என்ன என்று பார்த்தோம். 
அடுத்ததாக வேடர்களின் தோற்றம் மற்றும் அவர்களின் வகைகள் போன்றவற்றைப் பார்த்தோம் அடுத்ததாக பழங்குடி சமூகத்தின் தோற்றம் மற்றும் மாற்றங்கள் தொடர்பாக பார்த்தோம். பாரம்பரிய வாழ்க்கை முறை 
பழங்குடி சமூகத்தில் பெண்களின் நிலை 
பழங்குடியினர் வாழ்க்கை முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் தாக்கங்கள்
 பழங்குடியினர் சமூக கலாச்சார மாற்றங்கள் 
பழங்குடியைச் சேர்ந்த பெண்கள் எவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பாக பார்த்தோம்.
இறுதியாக ஆதிவாசிகள் இனம் அழிவதற்கான காரணங்கள் தொடர்பாக பார்த்தோம். ஆதிவாசிகள் எவ்வாறான பிரதேசங்களில் பரந்து காணப்படுகின்றார்கள் மற்றும் இறுதியாக ஆதிவாசிகள் பரந்து வாழ்கின்ற இடங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் படங்களை  பின்னிணைப்பாக காண முடியும்.





ஆதிவாசிகள் இலங்கையில் வசிக்கும் பிரதேசத்தினை காட்டும் படம்































                            

ஆதிவாசி இனம் பற்றிய காணொளிகள்








































No comments:

Post a Comment