சமுதாயம் என்றால் என்ன ?
சமுதாயம் என்றால் என்ன என்று பார்த்தோம் ஆனால் சிறிதாகவோ, பெரிதாகவோ இருக்கக்கூடிய சமூகமொன்று ஒன்றாக இணைத்து வாழக்கூடிய வாழ்விடத்தில் இருக்கும் மக்களை ஏற்றுக்கொண்ட பண்புகள் அல்லது வாழ்க்கை நியமங்கள் அடிப்படையில் உருவாகிய குழுவே சமுதாயம் எனப்படும்.
அனைத்து தரப்பினரும் தன்னிறைவான ஒரு உறவின் அடிப்படையில் ஒரு அளவுகோல் அடிப்படையில் வாழ்கின்ற குழுவை சமுதாயம் எனப்படும் இங்கே எல்லா சமூகமும் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டியது இல்லை சமூகத்தினுள் நெருக்கமான தொழில்முறை உறவு என்பன காணப்படும் நேரடித்தொடர்பு நிலவுகின்ற காரணத்தினால் நபர்களுக்கிடையிலான புரிந்துணர்வு அதிகமாகக் காணப்படும்.
சமுதாயத்தவர்கள் சமூக உறவினையும் உள்ளூர் தன்மைகளை கொண்டு ஒன்றிணைவதன் மூலமாக ஒரு வலுவான சமுதாயமாக மாற்றமடைகின்றனர்.என்றவாறான பல விளக்கங்களை முன்வைத்து மக்ஐவர் தங்கள் சமுதாயம் பற்றிய வரைவிலக்கணத்தைக் கட்டியெழுப்பியுள்ளார்.
ஒரு சமுதாயமானது இடத்தினை மையப்படுத்தியதாக இருக்கும் அந்த இடத்தை மையப்படுத்திய சமூகம் ஒரு குழுவாக திரண்டிருக்கும். அந்தக்குழு சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ காணப்படும். ஆனால், அவர்கள் பொதுவான விடயத்தை தம்மிடம் பகிர்ந்து வாழ்வார்.
உதாரணம் தொழில், சமயம், கலாசாரம்
சமுதாயம் கிராமம், நகரம் எவ்வாறு இருந்தாலும் சமூகங்கள் வாழ்விடத்தாலேயே தீர்மானிக்கப்படும். சமூக உறவுகள் மிக நெருக்கமானதாகக் காணப்படும் குறிப்பிட்ட சமுதாயத்தின் அறியப்பட்ட நபர்கள் அதிகளவாகக் காணப்படுவார்கள்.
சமுதாயம் ஒன்றில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படுகின்ற போது உள்ளூர் தன்மை காரணமாக ஒன்றிணைவார்கள். உ+ம் :- மரணச் சடங்கின் போதும் அறுவடை வெட்டுதலின் போதும்.
No comments:
Post a Comment